'சூரரை போற்று' படம் குறித்த வதந்தி: சூர்யாவின் நிறுவனம் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான திரைப்படம் ’சூரரைப்போற்று’. இந்த திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னரே ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக சூர்யா, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் தற்போது ’சூரரைப்போற்று’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவலுக்கு விளக்கம் அளித்த சூர்யாவின் 2டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ’சூரரைப்போற்று’ குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தயவு செய்து இந்த படத்தின் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ’சூரரைப்போற்று’ டிரைலர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பை 2டி நிறுவனமே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Do not spread or believe any false news, please wait for the official announcement soon!! #SooraraiPottru
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) October 7, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com