'இது சட்டப்படி குற்றம்': 'ஜெய்பீம்' படம் குறித்து எச்சரிக்கை விடுத்த சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,November 02 2021]

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடியில் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திலிருந்து எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது

சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படத்தை ஒரு சில ஹோட்டல் உள்பட பொது இடங்களில் திரையிடப்படுவதாக தகவல்கள் வெளியானது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியானது

இந்நிலையில் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது ’ஜெய்பீம்’ திரைப்படம் அமேசான் ஓடிடியில் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஓட்டல்கள், பேருந்துகள் உள்பட பொது இடங்களில் திரையிட தடை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு யாரும் உடந்தையாக இருக்கக் கூடாது என்று எச்சரிக்கை படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீறி பொது இடத்தில் ’ஜெய்பீம்’ திரைப்படத்தை திரையிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது அன்பான ரசிகர்கள் இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டு கொள்வதாகவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.