ஆயுத பூஜை ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யாவின் படம்!

தமிழகத்தில் தற்போது திரையரங்குகள் திறந்து விட்ட நிலையில் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி நீண்ட விடுமுறை தினங்கள் காரணமாக பல திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. ஆயுத பூஜை தினத்திற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் சிவகார்த்திகேயன் ’டாக்டர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆயுதபூஜை தினத்தில் சுந்தர் சி யின் ’அரண்மனை 3’ சசிகுமாரின் ’ராஜ வம்சம்’ சித்தார்த்தின் ’மகா சமுத்திரம்’ உள்ளிட்ட திரை படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள ’உடன்பிறப்பே’ என்ற திரைப்படமும் அக்டோபர் 14ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அக்டோபர் 14ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் சசிகுமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் சூரி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் ‘ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும்’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதேபோன்று சிறப்பான வரவேற்பை இந்த ’உடன்பிறப்பே’ திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.