சூர்யாவின் அடுத்தடுத்த 4 படங்களின் ரிலீஸ் குறித்த தகவல்கள்!

  • IndiaGlitz, [Thursday,August 05 2021]

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் அடுத்தடுத்த நான்கு திரைப்படங்கள் ரிலீஸ் குறித்த தகவல்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்

சூர்யா சற்றுமுன்னர் தனது சமூக வலைதளத்தில் தன்னுடைய 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நான்கு வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்

முதல் படம் ’ராரா’. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்பதன் சுருக்கமான டைட்டில் கொண்ட இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். ரம்யா பாண்டியன், வாணிபோஜன் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர்.

இரண்டாவதாக ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ’உடன்பிறப்பு’ என்ற திரைப்படமும் அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது. இதில் சசிகுமார், ஜோதிகா, சமுத்திரகனி, சூரி, காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இரா. சரவணன் என்பவர் இயக்கி வருகிறார்.

மூன்றாவதாக சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் அமேசானில் நவம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவதாக அருண் விஜய்யின் மகன் அர்னவ் அருண்விஜய் நடிக்கும் திரைப்படம் ’ஓ மை டாக்’. சரோவ் சண்முகம் இயக்கத்தில் உருவான இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது