ஹை ஸ்பீடில் கார்த்திக் சுப்புராஜ்.. 'சூர்யா 44' படம் குறித்த ஆச்சரிய தகவல்..!

  • IndiaGlitz, [Monday,October 07 2024]

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம், கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் ’சூர்யா 44’ என அறிவித்தார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் தொடங்கியது, அதன் பின்னர் ஊட்டி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக சூர்யா தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜூன் மாதம் தொடங்கி, அக்டோபர் முதல் வாரத்திலேயே, சுமார் நான்கு மாத காலத்திலேயே, படப்பிடிப்பு நிறைவடைந்தது. விரைவில் தொழில்நுட்ப பணிகளும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். நடிகை ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து தயாரிக்கின்றனர்.

More News

ஸ்பெயின் தெருவில் ஜாலி வாக்கிங் செய்த அஜித் - ஷாலினி.. ரொமான்ஸ் வீடியோ..!

நடிகர் அஜித் தற்போது படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு, ஸ்பெயின் தெருக்களில், அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் செல்பி வீடியோ தற்போது இணையத்தில்

வந்த அடுத்த நாளே வெளியேறும் போட்டியாளர்.. இன்று எலிமினேஷன் ஆவது யார்?

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கிய நிலையில், இன்று ஒருவர் எலிமினேஷன் ஆகப் போவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வந்த முதல் நாளே கன்ஃபெக்சன் ரூம்.. அலறிய போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று தான் தொடங்கிய நிலையில், முதல் நாளே தன்னை கன்ஃபெக்சன் அறைக்கு அழைத்து பேசுங்கள் என்று போட்டியாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வைரல் ஆகும் அர்னவ் மனைவியுடன் அன்ஷிதா பேசும் போன் உரையாடல்..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரமாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், 18 போட்டியாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர் என்பதும், முதல் நாளே ஆண்கள் மற்றும் பெண்கள் தங்குவதற்கான

இட்லி, தோசை, பில்டர் காபி.. நானும் தமிழ் பொண்ணுதான்.. ஹன்சிகா வெளியிட்ட வீடியோ..!

நடிகை ஹன்சிகா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள ஓட்டலில் இட்லி, தோசை, பில்டர் காபி சாப்பிட்ட வீடியோவை வெளியிட்டு,