வெள்ளம் நேரத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்த ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..!

  • IndiaGlitz, [Monday,March 04 2024]

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலும் அதன் பிறகு சில நாட்கள் கழித்து தென் மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யாவின் ரசிகர்கள் தன்னலம் கருதாமல் உதவி செய்தனர் என்பதும் தங்களால் முடிந்த சமூக பணிகளை செய்ததை அடுத்து அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் வெள்ள நேரத்தில் பொதுமக்களுக்கு உதவியாக இருந்த தனது ரசிகர்களுக்கு நேற்று அவர் தனது கையாலே விருந்து வைத்து அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து ரசிகர் மன்ற நிர்வாகம் மற்றும் பொதுமக்களுக்கு செய்யும் சமூக சேவைகள் குறித்து ஆலோசனை செய்து வருவார் என்பது தெரிந்தது.

அந்த வகையில் நேற்று திடீரென இன்ப அதிர்ச்சியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த தன்னுடைய ரசிகர்களுக்கு தடபுடலாக விருந்து வைத்து அசத்தியுள்ளார். சூர்யாவின் இந்த செயலுக்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இது குறித்து புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த ஆதரவு எனக்கு கிடைக்கலையே.. அதே நாளில் ரிலீசான படத்தின் இயக்குநர் ஆதங்கம்!

மலையாளத் திரைப்படமான 'மஞ்சுமெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழகத்திலும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

'குணா' குகையில் கண்டெடுத்ததை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன்: கமல்ஹாசன்

'குணா' குகையில் கண்டெடுத்த 3 குரங்கு எலும்புக்கூடுகளை 'ஹேராம்' படத்தில் பயன்படுத்தினேன் என கமல்ஹாசன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

 'தி கேரளா ஸ்டோரி': ஓடிடியில் 300 மில்லியன் நிமிடங்களைக் கடந்து சாதனை !!

சமீபத்தில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தினை, உலகளவில்  ZEE5 தளம் டிஜிட்டல் வெளியீடு செய்தது. இப்படம் தென்னிந்தியப் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க சாதனையைச் செய்துள்ளது.  

'சியான் 62' படத்தில் இணைந்த 100 படங்களுக்கும் மேல் நடித்த மலையாள ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

விக்ரம் நடிக்க இருக்கும் 'சியான் 62' படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக இருப்பதாக வந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் இதுகுறித்து= அறிவிப்பு வெளியாகி

முகேஷ் அம்பானி மகன் திருமண விழாவில் குடும்பத்துடன் ரஜினிகாந்த்.. வைரல் வீடியோ..!

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் மகளுடன் சென்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.