சூர்யா கொடுத்த ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக எம்பி தெரிவித்த நன்றி
- IndiaGlitz, [Monday,May 11 2020]
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முதல்கட்ட ஊரடங்கு அறிவித்தபின் பெப்சி தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட நிலையில் முதல் முதலாக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தவர் நடிகர் சூர்யா தான் என்பது தெரிந்ததே. அதன் பின்னர்தான் பல நட்சத்திரங்கள் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோர் பெப்சி தொழிலாளர்களுக்காக நிதியுதவி செய்தனர்.
அந்த வகையில் கஷ்டப்படும் ஏழைகளுக்காக முதல் நபராக உதவி செய்யும் நடிகர் சூர்யா தற்போது மேலும் ஒரு 5 லட்சம் ரூபாய் நன்கொடை கொடுத்த செய்தி வெளியாகியுள்ளது. மதுரை எம்பி வெங்கடேசன் அவர்கள் ’அன்னவாசல்’ என்ற திட்டத்தை ஆரம்பித்து மதுரை மட்டுமின்றி பல பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் பசியால் வாடும் பலருக்கு உணவுகளை அளித்து வருகிறார். அவருடைய இந்த திட்டத்திற்கு பலர் நிதியுதவி செய்து வரும் நிலையில் தற்போது நடிகர் சூர்யா 5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.
இதுகுறித்து வெங்கடேசன் எம்பி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த சூர்யாவுக்கு நன்றி. ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் என்பது வள்ளுவன் மொழி. 'அகரம்' மூலம் ஏழை மக்களின் கல்விப் பசி ஆற்றி வருபவர் திரைக்கலைஞர் சூர்யா. இப்போது 'ஆகாரம்' மூலம் அன்னவாசல் வழி வந்து விளிம்பு நிலை மனிதரின் பசியாற்றவும் முன்வந்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த உதவிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#அன்னவாசல் திட்டத்துக்கு@Suriya_offl
— Su Venkatesan MP (@SuVe4Madurai) May 11, 2020
ஐந்து லட்சம் #நன்கொடை
சு.வெங்கடேசன் எம்.பி நன்றி!
நல்ல முன்னெடுப்புக்கள் பல நல்ல உள்ளங்களை ஒருங்கிணைத்துக் கொண்டே நகரும். அப்படியான நகர்வில், தன் பங்களிப்பாக 5 இலட்சம் நன்கொடையாக அன்னவாசலில் சோறூட்ட அளித்த@agaramvision
1/2 pic.twitter.com/AFD1PyjKAJ