நாளை 'ஜெய்பீம்' ரிலீஸ்: இன்று ரூ.1 கோடி நிதியுதவி செய்த சூர்யா!

  • IndiaGlitz, [Monday,November 01 2021]

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இன்று தமிழக முதல்வரிடம் சூர்யா ரூபாய் ஒரு கோடி நிதி உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

சூர்யா நடித்த ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் பழங்குடியின மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் குறித்து பேசப்பட்டு உள்ளன என்பதும் இந்த படத்தின் டீஸர் டிரைலர் ஆகியவை மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சற்று முன்னர் பழங்குடி இருளர் மாணவர்களின் கல்வி நலனுக்காக முதலமைச்சர் முக ஸ்டாலின் இடம் ரூபாய் ஒரு கோடி நடிகர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் மூலம் அளித்துள்ளார்

நாளை வெளியாக இருக்கும் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்ட நிலையில் அந்த இன மக்களுக்காக ரூபாய் ஒரு கோடி நிதி அளித்து உள்ள சூர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.