'என்.ஜி.கே' படக்குழுவினர்களுக்கு தங்கமான பொங்கல் பரிசு கொடுத்த சூர்யா

  • IndiaGlitz, [Monday,January 14 2019]

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வந்த 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின்போது படத்தில் பணிபுரிந்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் நடிகர் சூர்யா தங்கமான பொங்கல் பரிசை அளித்துள்ளார்.

ஆம், இந்த படத்தில் பணிபுரிந்த பெரிய கலைஞர்கள் முதல் டிரைவர், கிளாப் அடிப்பவர் வரை அனைவருக்கும் சூர்யா, தங்கக்காசுகளை தனது கையால் பொங்கல் பரிசாக வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொருவரின் பெயர் பொறித்த பொங்கல் நல்வாழ்த்து அட்டையையும் அவர் வழங்கியுள்ளார். தன்னுடைய படத்தில் பணிபுரிந்த கலைஞர்களுக்கு எப்போதுமே மரியாதை அளித்து வரும் சூர்யா, இம்முறை தங்கமான மரியாதையை அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், பிரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

 

More News

'தளபதி 63' படத்தில் பிரபல நடிகரின் மகள்!

தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 63' படத்தின் ஆரம்பகட்ட பணிகளை விறுவிறுப்பாக கவனித்து வரும் இயக்குனர் அட்லி, இந்த படத்தில் நடிக்கும் நடிகர்,

பிரபுதேவாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி குறித்த தகவல்

பிரபுதேவா நடித்த 'குலேபகாவலி, 'மெர்க்குரி', மற்றும் ;லட்சுமி ' ஆகிய மூன்று படங்கள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் 6 படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினி-கமல் எனது நண்பர்கள் இல்லை! பிரபல நடிகர் பேட்டி

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தனது சக நடிகர்கள் மட்டுமே என்றும், நண்பர்கள் இல்லை என நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

என்.ஜி.கே படப்பிடிப்பு நிறைவு: சூர்யாவுக்கு நன்றி சொன்ன இயக்குனர்

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வந்த 'என்.ஜி.கே. திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்: 17 வயது இளம்பெண்ணால் ஏற்பட்ட விபத்து

கடந்த சில ஆண்டுகளாக விபரீதமான சேலஞ்சுகள் உலகம் முழுவதும் வைரலாகி விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில் தற்போதும் அதேபோன்று 'பேர்டு பாக்ஸ் சேலஞ்ச்' என்ற ஆபத்தான சேலஞ்ச் பரவி வருகிறது.