விக்னேஷ் சிவனுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சூர்யா

  • IndiaGlitz, [Friday,March 16 2018]

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான வெற்றிப்படங்களில் ஒன்று. ஒரு பெரிய நட்சத்திர கூட்டமே நடித்திருந்த இந்த படம் சூர்யாவின் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு அமைந்ததும், அனிருத்தின் இசையும் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் வெற்றிக்காக இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவருக்குக் புத்தம்புதிய டொயோட்டா கார் ஒன்றை சூர்யா பரிசளித்து அவருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். நேற்று சூர்யா, காரின் சாவியை விக்னேஷ் சிவனிடம் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இதுகுறித்து நெகிழ்ச்சியுடன் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'யார் என்ன சொன்னாலும் அன்பாக இருப்போம். சூர்யாவின் விலைமதிப்பில்லா இந்த அன்புக்கு எனது நன்றிகள். என்னை போன்ற ஆரம்ப நிலையில் உள்ள கலைஞர்களுக்கு இதுபோன்ற பரிசுகள் நல்ல ஊக்கத்தை தரும். இந்த பரிசுக்கு நான் தகுதியுடையவன் தானா என்று தெரியவில்லை, இருப்பினும் உங்கள் அன்புக்கு நன்றி சூர்யா சார்' என்று கூறியுள்ளார்.