மகாபாரத கதை.. பெரிய பட்ஜெட் பாலிவுட் படம் .. 2 பாகங்கள்.. சூர்யாவின் மாஸ் திரைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,September 16 2023]

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் ஏற்கனவே பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பதை பார்த்தோம்.

குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’வாடிவாசல்’, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’ரோலக்ஸ்’ மற்றும் ’இரும்புக்கை மாயாவி’ உள்பட ஒரு சில படங்களில் அவர் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் தற்போது சூர்யா நேரடியாக நடிக்க இருக்கும் பாலிவுட் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரை கதை அம்சமாக கொண்டு ’கர்ணா’ என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தை ராகேஷ் ஓம் பிரகாஷ் என்ற பாலிவுட் இயக்குனர் இயக்க உள்ளார் என்பதும் இரண்டு பாகங்களில் மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா இந்த படத்தில் கர்ணன் கேரக்டரில் நடிக்க உள்ளார். ஏற்கனவே சிவாஜி கணேசன் கர்ணன் என்ற கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது சூர்யாவும் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாகவும் தமிழ், ஹிந்தி உள்பட இந்தியாவின் பல முக்கிய மொழிகளில் இந்த படம் உருவாகும் என்று கூறப்படுகிறது.

More News

இன்னிக்கு நான் நிம்மதியாக தூங்குவேன்.. 'மார்க் ஆண்டனி' வெற்றி குறித்து விஷால்..!

விஷால் நடித்த  'மார்க் ஆண்டனி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக இந்த படம் முதல் நாளே நல்ல

ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கிய தயாநிதி மாறன் வாரிசுகள்.. சென்னையில் ஒரு புதிய முயற்சி..!

 முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் வாரிசுகளான கலாநிதி மாறன் சன் நெட்வொர்க் தொடங்கி ஆரம்பம் முதலே தொழிலதிபராக உள்ளார். ஆனால் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆரம்பம் முதலே

நயன்தாரா அடுத்த படத்தின் முக்கிய பணி தொடக்கம்.. விரைவில் ரிலீஸ்..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த 'ஜவான்' திரைப்படம்  சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது அடுத்த

திரையில் ரிலீஸ் ஆகும் முன்பே போட்ட முதலீட்டை எடுத்துவிட்ட ஜெயம் ரவி படம்.. மகிழ்ச்சியில் படக்குழு..!

ஜெயம் ரவி நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் திரைக்கு வெளியாகும் முன்பே இந்த படத்தின் வியாபாரத்தின் சில பகுதி முடிந்து, செலவு செய்த பணத்தை

விஜய் சேதுபதியும் இல்லை, துருவ் விக்ரமும் இல்லை.. ஜேசன் சஞ்சய் முதல் ஹீரோ இவர்தான்..!

தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக இருக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்தது என்பதும் இதனை அடுத்து ஜேசன்