தரம் தாழ்ந்த விமர்சனம்: தொலைக்காட்சி அலுவலகம் முன் சூர்யா ரசிகர்கள் போராட்டம்

  • IndiaGlitz, [Saturday,January 20 2018]

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இரண்டு விஜேக்கள் சூர்யாவின் உயரம் குறித்து கிண்டலடித்து பேசிய விவகாரம் சூர்யா ரசிகர்களை பெரும் அதிருப்தி அடைய செய்தது. இந்த நிலையில் விஜேக்களின் தரம் தாழ்ந்த விமர்சனத்திற்கு சூர்யாவின் ரசிகர்களும், கோலிவுட் திரையுலகினர்களும் தங்களுடைய கண்டங்களை தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று அந்த தொலைக்காட்சி அலுவலகம் முன் சூர்யாவின் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். விஜேக்களுக்கு எதிராகவும், தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில், 'தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற' என்று கூறியுள்ளார்.