close
Choose your channels

ஜூலையில் சூர்யா ரசிகர்களுக்கு ட்ரிபிள் விருந்து.. திகட்ட திகட்ட அப்டேட்டுகள்..!

Wednesday, July 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாள் வர இருப்பதை அடுத்து இந்த மாதம் அவருடைய மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

சூர்யா பிறந்தநாள் ஜூலை 23ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் அன்றைய தினம் ’கங்குவா’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் அல்லது முதல் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அதே தேதியில் சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தின் டைட்டில் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யா - பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட இரண்டு பாடல் காட்சிகள் அந்தமானில் படமாக்கப்பட்டு விட்டதாகவும், அதேபோல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிகிறது. இந்த வாரம் அந்தமானில் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் அடுத்த கட்டமாக படக்குழுவினர் ஊட்டி செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘சூரரை போற்று’ இந்தி ரீமேக் படமான ‘சர்ஃபைரா’ படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் சில காட்சிகளில் நடித்துள்ளார். மொத்தத்தில் ‘கங்குவா’ சிங்கிள் அல்லது டீசர், ‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் மற்றும் ‘சர்ஃபைரா’ ரிலீஸ் என சூர்யா ரசிகர்களுக்கு இம்மாதம் ட்ரிபிள் விருந்து உறுதியாகியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.