ஒருநாள் மட்டும் சூர்யாவை எனக்கு தருவீர்களா? ரசிகையின் கேள்விக்கு ஜோதிகாவின் நச் பதில்..!
- IndiaGlitz, [Friday,March 22 2024]
சூர்யாவின் ரசிகை ஒருவர் ஜோதிகாவிடம் ’நான் சூர்யாவின் வெறித்தனமான ரசிகை என்றும் தனக்காக சூர்யாவை ஒரு நாள் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு ஜோதிகா கூறிய நச் பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை ஜோதிகா கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும் அவ்வப்போது ஜோதிகா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து வருவார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட்டில் வெளியான ’சைத்தான்’ என்ற படத்தில் ஜோதிகா நடித்திருந்த நிலையில் இந்த படம் குறித்த பதிவுகளை அவ்வப்போது ஜோதிகா தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில் இப்படி ஒரு பதிவில் கமெண்ட் செய்திருந்த சூர்யாவின் தீவிரமான ரசிகை ஒருவர் ’தான் 15 ஆண்டுகளாக சூர்யாவின் தீவிர ரசிகையாக இருப்பதாகவும், ’சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஐசு உடன் ஒரு நாளைக்கு மட்டும் சூர்யாவை கொடுத்தது போல் எனக்கும் ஒரு நாள் மட்டும் சூர்யாவை தருவீர்களா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த கேள்விக்கு பதில் கூறியுள்ள ஜோதிகா ’கண்டிப்பாக அதற்கு அனுமதிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பதிவுகளும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.