கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Saturday,April 01 2023]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த சில ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழர்களின் தொன்மையான பல பொருள்கள் இங்கு கிடைத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் இன்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு அறிவிக்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் கீழடி அகழ்வாராய்ச்சி மையம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வருகிறது. இங்கே தமிழர்களின் பழங்கால பண்பாட்டை வெளிக்கொணரும் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பாக கிமு ஆறாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய பல தொன்மையான பொருள்கள் கிடைத்துள்ளது என்றும் இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு தொடர்புள்ளது என்றும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.

இங்கு வசித்து தமிழர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்து இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்வு செய்தபோது ஒரு கலைப்பொருள் கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் இந்த அகழ்வாராய்ச்சியை நேரில் பார்த்தனர். அவர்களை கீழடி அருங்காட்சியகம் அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை சுற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது, தோல்விக்கு இதுதான் காரணம்; சிஎஸ்கே கேப்டன் தல தோனி..!

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிதொடர் தொடங்கியது. முதல் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற

பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் படம்: டைட்டில் லுக் ரிலீஸ்..!

இயக்குனர் இமயம் பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம்.

மீண்டும் விஜய்யுடன் மோதும் பிரபல நடிகரின் படம்.. 4 ஹீரோயின்கள் அறிவிப்பு..!

விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்துடன் வெளியான பிரபல நடிகரின் அடுத்த படம் விஜய் நடித்து வரும் 'லியோ' வெளியாகும் தினத்தில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நிறைமாத கர்ப்பத்திலும் செம டான்ஸ் ஆடும் தமிழ் நடிகை.. வீடியோ வைரல்..!

 தமிழ் நடிகை ஒருவர் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் செம டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

விஜய்சேதுபதியின் தமிழ் வெப் தொடர்.. தேசிய விருது பெற்ற இயக்குனருடன் கூட்டணி..!

பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த 'பார்சி' என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி தமிழில் ஒரு வெப்