கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்.. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் கடந்த சில ஆண்டுகள் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தமிழர்களின் தொன்மையான பல பொருள்கள் இங்கு கிடைத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் இன்று கீழடியில் உள்ள அருங்காட்சியகத்தை பார்வையிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் அகழாய்வு அறிவிக்கப்பட்டு பின்னர் தமிழ்நாடு தொல்லியல் துறையால் செயல்பட்டு வரும் கீழடி அகழ்வாராய்ச்சி மையம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் நடைபெற்று வருகிறது. இங்கே தமிழர்களின் பழங்கால பண்பாட்டை வெளிக்கொணரும் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன என்பதும் குறிப்பாக கிமு ஆறாம் நூற்றாண்டுக்கும் ஐந்தாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்துக்குரிய பல தொன்மையான பொருள்கள் கிடைத்துள்ளது என்றும் இது சிந்து சமவெளி நாகரிகத்திற்கு தொடர்புள்ளது என்றும் ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இங்கு வசித்து தமிழர்கள் கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்து இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நான்காம் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆய்வு செய்தபோது ஒரு கலைப்பொருள் கிமு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்தது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் இந்த அகழ்வாராய்ச்சியை நேரில் பார்த்தனர். அவர்களை கீழடி அருங்காட்சியகம் அதிகாரிகள் வரவேற்று அவர்களுக்கு அகழாய்வு நடைபெற்று வரும் இடத்தை சுற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout