ஆர்கே செல்வமணி கேட்ட அடுத்த நிமிடமே அள்ளி கொடுத்த சூர்யா குடும்பம்

  • IndiaGlitz, [Monday,March 23 2020]

பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி அவர்கள் சற்றுமுன் வெளியிட்ட அறிக்கையில் வேலைநிறுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகையர் உள்பட திரையுலகை சேர்ந்த அனைவரும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

ஆர்கே செல்வமணியின் அறிக்கை வெளிவந்த ஒருசில நிமிடங்களில் சிவகுமார், சூர்யா, கார்த்தி சார்பில் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. சூர்யா குடும்பத்தினர்களை அடுத்து முன்னணி நடிகர், நடிகையர் பலரும் பெப்சி தொழிலாளர்களுக்கு நன்கொடை வழங்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா என்பது ஒரு குடும்பம் என்று அனைத்து நட்சத்திரங்களும் கூறி வரும் நிலையில் குடும்பத்தில் உள்ள ஒரு பிரிவினர் கஷ்டப்படும்போது இன்னொரு பிரிவினர் கைகொடுத்து மனிதநேயம் காக்க வேண்டும் என்பதே அனைத்து தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது