மிஸ் யூ சார்.. இயக்குனர் சித்திக் மறைவுக்கு சூர்யாவின் நெகிழ்ச்சியான அறிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த ’பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் இயக்குனர் சித்திக் நேற்றிரவு மாரடைப்பால் காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சித்திக் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சூர்யா ’பிரண்ட்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த நெகிழ்ச்சியான சில சம்பவங்களையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ’மிஸ் யூ சார்’ என்று உருக்கமாக அவர் குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நினைவுகள் என் மனதை கனமாக்கியுள்ளன. சித்திக் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவருடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இந்த துக்கமான தருணத்தில் உங்கள் அனைவருடனும் நான் நிற்கிறேன். ‘பிரண்ட்ஸ்’ படம் பல்வேறு வழிகளில் எனக்கு முக்கியமான படம். சிறிய காட்சியில் நடிப்பில் முன்னேற்றம் தெரிந்தாலும் உடனே பாராட்டி எனக்கு ஊக்கமளித்தார். படப்பிடிப்பின் போது, எடிட் செய்யும் போது, எனது நடிப்பு குறித்த அவர் தனது எண்ணங்களை மிகுந்த பாசத்துடன் பகிர்ந்துகொள்வார்.
ஃபிலிம் மேக்கிங்கை ரசிக்கவும், சிரிக்கவும், எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடக்கவும் எனக்கு சொல்லிக் கொடுத்தார். ‘பிரண்ட்ஸ்’ படம் எடுக்கும் காலக்கட்டத்தில் சீனியர் மற்றும் புகழ்பெற்ற இயக்குநராக இருந்த சித்திக் தன்னுடைய நட்பார்ந்த அணுகுமுறையால் அனைவரையும் சமமாக நடத்தினார். படப்பிடிப்பு தளத்தில் அவர் கோபமடைந்ததை நான் பார்த்ததே இல்லை. அவருடன் பணிபுரிவது என்றென்றும் எனக்கு விருப்பமான ஒன்று. என் திறமையை நான் நம்ப வேண்டும் என்ற தன்னம்பிக்கையை எனக்கு ஊட்டினார். எப்போது சந்தித்தாலும் என்னுடைய குடும்பத்தை பற்றி அக்கறையுடன் விசாரிப்பார்.
ஒரு நடிகனாக நான் உருவான ஆரம்ப காலக்கட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. மிஸ் யூ சார். நீங்கள் எங்களுக்கு அளித்த நினைவுகளும் அன்பும், எங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும்” என நடிகர் சூர்யா தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
Siddique Sir 🙏🏾 pic.twitter.com/o3St0wOrlb
— Suriya Sivakumar (@Suriya_offl) August 9, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments