சொன்னதை செய்த சூர்யா! கோலிவுட் திரையுலகம் வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா தான் நடித்து தயாரித்த ’சூரரைப்போற்று’ திரைப்படம் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சூர்யாவின் இந்த அறிவிப்புக்கு திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ’சூரரைப்போற்று’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் குறித்த அறிவிப்பில் அந்த படத்தின் வருமானத்திலிருந்து ரூபாய் ஐந்து கோடியை பல்வேறு பிரிவினர்களுக்கு நன்கொடையாக கொடுக்க இருப்பதாகவும் அவர் வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில் வாக்குறுதி கொடுத்தபடியே தற்போது அவர் இந்த நன்கொடை தொகையை கொடுத்துள்ளார். வாக்குறுதி கொடுத்த ரூ.5 கோடியில் முதல்கட்டமாக திரையுலகிற்கு ரூபாய் 1.5 கோடி சூர்யா கொடுத்துள்ளார். சூர்யாவின் சார்பில் அவரது தந்தை சிவகுமார் இந்த பணத்தை கொடுத்துள்ளார். சூர்யா கொடுத்த ரூபாய் ஒன்றரை கோடியில், ஒரு கோடி ரூபாய் பெப்சி அமைப்பு செல்கிறது என்பதும் அதில் குறிப்பாக அதில் ரூபாய் 20 லட்சம் இயக்குனர்கள் சங்கத்துக்கு செல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 30 லட்ச ரூபாய் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், 20 லட்ச ரூபாய் நடிகர் சங்கத்திற்கும் சூர்யா அளித்துள்ளார்.
மீதி உள்ள மூன்றரை கோடி ரூபாயை அவர் பொது மக்களுக்கு அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளிவரும். வாக்குறுதி கொடுத்த படியே சூரரைப்போற்று வருமானத்தில் இருந்து நன்கொடை கொடுத்த சூர்யாவுக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com