'சூர்யா 42' படத்தின் 6 முக்கிய கேரக்டர்கள்: சிறுத்தை சிவாவின் சம்பவம்!

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த படத்தின் பூஜையும் நடைபெற்று தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஆறு நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யா ஜோடியாக திஷா பதானி என்ற பாலிவுட் நடிகை நடிகை நடிக்கவிருப்பது ஏற்கனவே தெரிந்ததே. இதுபோக தற்போது இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ் மற்றும் கோவை சரளா ஆகிய 4 நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் நால்வருமே காமெடியர்கள் என்பதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தேவிஸ்ரீபிரசாத், சூர்யா படத்துக்கு இசையமைக்க இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிரடி ஆக்ஷன் படமாக மட்டுமின்றி, ரொமான்ஸ், செண்டிமெண்ட், காமெடி ஆகியவை கலந்த ஒரு சம்பவத்தை சிறுத்தை சிவா இந்த படத்தில் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.