தமிழிசை குறித்து அவதூறு வீடியோ: திருச்சி இளம்பெண் அதிரடி கைது

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

திருச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குறித்து அவதூறான வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி அருகே உள்ள மணப்பாறை என்ற பகுதியை செரெந்த சூர்யாதேவி என்பவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்த வீடியோ ஒன்றில் தமிழிசையை அவதூறாகவும், ஆபாச வார்த்தைகளாலும் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலானது. இந்த வீடியோவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் குவிந்த நிலையில் பாஜக நிர்வாகிகள் சிலர் சூர்யாதேவி மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த சைபர் க்ரைம் போலீசார் சூர்யாதேவி சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். இவர் மீது இரண்டு பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.