சூர்யாதேவி திடீர் கைதா? தனியாக தவிக்கும் குழந்தைகள்
- IndiaGlitz, [Thursday,July 23 2020]
வனிதா திருமணம் பிரச்சனையில் அவ்வப்போது காரசாரமான வீடியோக்களை பதிவு செய்து வந்த சூர்யாதேவி, ஊடகங்களிலும் இதுகுறித்த விவாதங்களில் கலந்து கொண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சூர்யா தேவி, வனிதா மீதும், வனிதா சூர்யாதேவி மீதும் வடபழனி காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக நேற்று இரவு சூர்யாதேவியை காவல்துறையினர் அழைத்து சென்றதாகவும், அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் தனது குழந்தைகளிடம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறி போலீசாருடன் சென்ற சூர்யா தேவி, இன்று காலை வரை வராததால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. இதுகுறித்து சூர்யாதேவி தரப்பில் இருந்து அவரது யூடியூபில் ஒரு வீடியோவும் பதிவு செய்யப்பட்டுள்ளது
சூர்யாதேவியின் குழந்தைகள் வீட்டில் தனியாக பரிதாபமாக இருக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருவதை அடுத்து வனிதா மீது நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சூர்யாதேவியின் வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளது.