close
Choose your channels

விஜய்சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!

Sunday, October 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. ஓடிடியில் சமீபகாலமாக வெளிவந்த திரைப்படங்கள் மக்களின் ஆதரவை பெறாத நிலையில் முதல்முறையாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்ற படம் என்ற பெருமை இந்த படத்திற்கு உண்டு.

இந்த படத்தை விஜய் சேதுபதி ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரமுகர்களும் பார்த்து பாராட்டி வருகின்றனர்.இது வரை வெளிவந்த கிராமத்து கதைகளில் மிகவும் வித்தியாசமான கதை என்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு தேசிய விருது பெறும் அளவிற்கு சூப்பராக இருந்தது என்றும் திரையுலக பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் ’க/பெ ரணசிங்கம்’. இயக்குனர் விருமாண்டி, விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜிப்ரான், மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

சூர்யாவின் பாராட்டால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment