'பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க!.. சூர்யா வாழ்த்து தெரிவித்தது யாருக்கு தெரியுமா?

’பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க’ என பிரபல நடிகர் நடித்த படத்தின் டிரைலருக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தியின் ’சர்தார்’ படத்தின் டீசருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டில், ‘என்ன ஒரு வலிமையான அனைவரையும் ஈர்க்கக்கூடிய ட்ரெய்லர், வலிமையான கண்டெண்ட் தான் ஜெயிக்கும், ‘சர்தார்’ பட குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மேலும் பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க!.. என்றும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ’சர்தார்’ படத்தின் டிரைலர் விழாவில் பேசிய கார்த்தி, ‘அண்ணன் சூர்யாவுக்கு ’அயன்’ திரைப்படம் பலவிதமான கெட்டப் உள்ள ஒரு திரைப்படமாக அமைந்தது. அதேபோல் ’சர்தார்’ திரைப்படம் எனக்கு பல கெட்டப்புகளில் வரும் படமாக அமைந்துள்ளது. இந்த படம் நிச்சயம் அனைவரையும் கவரும்’ என்று கூறியுள்ளார்.

கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை பிஎஸ் மித்ரன் இயக்கி உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.
 

More News

ஜனனிக்கு மாறி மாறி லவ் புரபோஸ் செய்த 2 போட்டியாளர்கள்.. என்ன நடக்கும்?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் அனைவரையும் கவர்ந்த போட்டியாளரான ஜனனிக்கு இரண்டு சக போட்டியாளர்கள் மாறி மாறி

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: புகார் கொடுத்தவர் யார் தெரியுமா?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் சரியாக நான்கே மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி விட்டதாக

'PS1' வெற்றிக்கு பின் கார்த்திக்கு 'சர்தார்', ஜெயம் ரவிக்கு என்ன தெரியுமா?

சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படம் 100 வருட தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை செய்துள்ளது

முதல்வர் ஸ்டாலின் தந்த இன்ப அதிர்ச்சி: நெகிழ்ச்சி அடைந்த தமிழ் இயக்குனர்!

தமிழ் திரைப்பட இயக்குனருக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அளித்த இன்ப அதிர்ச்சியால் அந்த இயக்குனர் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். 

4 பேருக்கு நல்லது பண்ணினாலும் 40 ஆயிரம் பேருக்கு தெரியற மாதிரி பண்ணனும்: 'சர்தார்' டிரைலர்

கார்த்தி நடித்த 'சர்தார்' திரைப்படம் வரும் தீபாவளி முதல் ரிலீஸாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஓடும் இந்த டிரைலரில்