முதல் நாளில் இருந்தே சூப்பர்.. ஜோதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா!
Send us your feedback to audioarticles@vaarta.com
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் ஜோதிகா ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை அடுத்து முதல் நாளில் இருந்தே இந்த படம் குறித்து நான் கேள்விப் படும் தகவல் எல்லாம் நல்ல விதமாக இருக்கிறது என்று நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’தி கிரேட் இந்தியன் கிட்சன்’ என்ற திரைப்படத்தை இயக்கிய ஜோபேபி இயக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ’காதல்’. இந்த படம் குறித்த அறிவிப்பு நேற்று ஜோதிகாவின் பிறந்த நாளின் போது வெளியான நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் ஐடியா மற்றும் ஒவ்வொரு பணிகளையும் நான் முதல் நாளில் இருந்தே கவனித்து வருகிறேன். இயக்குனர் ஜோபேபி மிகவும் சூப்பராக செயல்பட்டு வருகிறார். மம்முட்டி, ஜோதிகா மற்றும் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது மனைவி ஜோதிகாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்களையும் அந்த டுவிட்டில் தெரிவித்துள்ளார்.
கடந்த 1990 இல் நடக்கும் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு மாத்யூஸ் இசையமைக்க இருக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இந்தப் படம் தமிழிலும் டப் செய்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
From day one, this film’s idea & every step taken by Dir JeoBaby & team @MKampanyOffl is so good!! Wishing @mammukka , Jo n team the best for @kaathalthecore . Happy happy birthday Jo!!! pic.twitter.com/SnavBrjGGm
— Suriya Sivakumar (@Suriya_offl) October 18, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments