பாலா படத்தை உறுதி செய்த சூர்யா! கவிதை நயத்துடன் ஒரு டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் ’எதற்கும் துணிந்தவன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் மீதமிருக்கும் நிலையில் அந்த பாடல் காட்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன்’ படத்தை முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தை முடித்தவுடன் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்த படம் குறித்து சற்று முன்னர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை நயத்துடன் கூடிய டுவிட் மூலம் உறுதி செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்
ஏற்கனவே பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘நந்தா’ மற்றும் ‘பிதாமகன்’ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்றன என்பதும் தெரிந்ததே.
என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர்…
— Suriya Sivakumar (@Suriya_offl) October 28, 2021
ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர்..
20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான்…
அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்… pic.twitter.com/H9wyutZD3h
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com