ரசிகர்களை பார்க்க தியேட்டருக்கு வருவேன்: சூர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
மே 31ஆம் தேதி ரிலீஸ் ஆகும் 'என்.ஜி.கே' படத்தின் முதல் நாள் முதல் காட்சியன்று ரசிகர்களை திரையரங்கில் சந்திப்பேன் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 5 மணி முதல் 5.30 வரை நேரலையாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது என்.ஜி.கே முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்கிற்கு வருவீர்களா? எந்த தியேட்டருக்கு வருவீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, 'கண்டிப்பாக ரசிகர்களை சந்திக்க முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்கிற்கு வருவேன். ஆனால் எந்த தியேட்டர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.
மேலும் இதுவரை நடித்த கேரக்டர்களில் சவாலான கேரக்டர் எது? என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, 'இனிமேல் நான் நடிக்க போகும் கேரக்டர் தான்' என்று பதிலளித்தார். எப்போதுமே நான் முடிந்து போனதை திரும்பி பார்ப்பதில்லை. இனிவரும் கேரக்டர்களில் எப்படி வித்தியாசமாக நடிக்கலாம் என்பதில்தான் கவனம் செலுத்துவேன்' என்று கூறினார்
மேலும் 'என்.ஜி.கே' திரைப்படம் வரும் 31ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்றும், அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இந்த படம் இருக்கும் என்றும் அனைவரும் திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ரசிக்கவும் என்றும் இறுதியில் சூர்யா கேட்டுக்கொண்டார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com