சிறுத்தை சிவா படத்தில் சூர்யாவுக்கு எத்தனை கேரக்டர்? ஆச்சரியமான தகவல்

சூர்யா நடித்துவரும் 42வது படமான ’சூர்யா 42’ படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் என்பதும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் 3டி டெக்னாலஜியில் உருவாக இருப்பதாகவும் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் சரித்திர கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 5 கேரக்டர்கள் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவல்கள் மேற்கண்ட ஐந்து கேரக்டர்களிலும் சூர்யாவே நடிக்க இருக்கிறார் என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ’தசாவதாரம்’ படத்தில் கமல்ஹாசன் 10 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்த நிலையில் சூர்யா தற்போது 5 கேரக்டர்களில் நடிக்கிறார் என்பதும், சரித்திர படங்களில் நாயகன் ஒருவர் 5 கேரக்டர்கள் நடிப்பது அனேகமாக இதுதான் முதல்முறை என்றும் கூறப்படுகிறது.

சூர்யா ஜோடி திஷா பதானி நடிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷா யூசூப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குழந்தைகளைத் தாக்கும் ப்ளூ காய்ச்சல்… தவிர்ப்பது எப்படி?

தமிழகம் முழுவதும் H1N1 என்று சொல்லக்கூடிய புதிய காய்ச்சலால்

'பொன்னியின் செல்வன்' படத்தை சமூக வலைத்தளங்களில் புரமோஷன் செய்யும் கேரக்டர்கள்!

சுபாஸ்கரன் அவர்களின் லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து வழங்கும், மணி ரத்னம் இயக்கியுள்ள "பொன்னியின் செல்வன்" படம் வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம்: எந்தெந்த கிழமைகளில் என்னென்ன மெனு?

முன்னாள் முதல்வர்கள் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தையும் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தையும் தொடங்கி வைத்த நிலையில் தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்

தந்தை கார்த்திக் உடன் செம மோதல்.. கெளதம் கார்த்திக் வெளியிட்ட வீடியோ!

நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கின் மகனும் தமிழ் திரையுலகின் இளம் நடிகருமான கௌதம் கார்த்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை கார்த்திக் உடன் மோதும் வீடியோவை வெளியிட்டுள்ள

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படம் குறித்து சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை இந்த படத்திற்கு கொடுத்து வருகின்றனர்.