close
Choose your channels

சூர்யாவுக்கு அடுத்த படத்தில் இந்த கேரக்டரா? பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துள்ளும் இளமை..!

Saturday, October 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் அடுத்த திரைப்படமான ’சூர்யா 43’ திரைப்படத்தை சுதா கொங்கரா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் இளமை துள்ளும் கல்லூரி மாணவன் கேரக்டரில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

சூர்யா தற்போது ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த திரைப்படமான ’சூர்யா 43’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. சுதா கொங்கரா இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பதும் இது அவரது நூறாவது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா கல்லூரி மாணவர் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவர் உடல் எடையை குறைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடித்தார். அதேபோல் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ‘ஆயுத எழுத்து’ என்ற படத்திலும் கல்லூரி மாணவராக நடித்தார்.

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இளமை துள்ளும் கல்லூரி மாணவன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் சூர்யா கேரக்டர் ’ஆயுத எழுத்து’ மைக்கேல் வசந்த், ‘வாரணம் ஆயிரம்’ சூர்யா கிருஷ்ணன் கேரக்டர்களை

விட இளமையாகவும், துள்ளலாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் இந்த படத்தின் வில்லனாக விஜய் வர்மா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment