விக்ரமை அடுத்து கேமியோ ரோலில் நடித்த சூர்யா: ஜூலை 1ல் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Tuesday,June 21 2022]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’விக்ரம்’ திரைப்படத்தில் சூர்யா, ரோலக்ஸ் என்ற கேமியோ ரோலில் நடித்து இருப்பார் என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய கேரக்டரும் ஒரு காரணம் என்பதும் தெரிந்ததே.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடிப்பதற்காக அவர் ஒரு பைசா கூட சம்பளம் வாங்காமல் நடித்த நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக கமல் ஹாசன் அவருக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசாக கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தை அடுத்து மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்டரி’ திரைப்படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் சூர்யாவாகவே வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்ததற்காகவும் சூர்யா ஒரு பைசா கூட சம்பளம் வாங்கவில்லை என்றும் மாதவனுடனான நட்பு காரணமாக இந்த படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்த படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ’சூரரை போற்று’ இந்தி ரீமேக் திரைப்படத்திலும் சூர்யா கேமியோ ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'விக்ரம்' படக்குழுவினர்களுக்கு விருந்து வைத்த தமிழ் நடிகர்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் தமிழகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற

'தளபதி 66' படத்தின் அட்டகாசமான டைட்டில் & பர்ஸ்ட்லுக் போஸ்டர்

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'தளபதி 66' படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. 

விஜய்-அஜித்தை வைத்து பான் - இந்தியா திரைப்படம்: கங்கை அமரன் சொன்னது உண்மையா?

விஜய் - அஜித் இணைந்து நடிக்கும் பான் - இந்தியா திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அவருடைய தந்தை கங்கை அமரன் கூறியதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும்

தீபாவளி ரிலீசில் இருந்து தள்ளி போகிறதா அஜித்தின் 'ஏகே 61?

அஜித் நடித்து வரும் 'ஏகே 61' படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் பைக் சுற்றுப் பயணத்தில்

விஜய்காந்த் கால் விரல்கள் அகற்றப்பட்டதா? தேமுதிக விளக்க அறிக்கை!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் நீரிழிவு நோய் காரணமாக அவருடைய கால் விரல்கள் அகற்றப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது.