close
Choose your channels

'சூரரை போற்று' மாறா கனவை சொந்த வாழ்வில் நிறைவேற்றிய சூர்யா.. குவியும் வாழ்த்துக்கள்..!

Friday, August 23, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

’சூரரை போற்று’ திரைப்படத்தில் மாறா என்ற கேரக்டரில் நடித்திருந்த சூர்யாவுக்கு ஒரு விமானம் வாங்க வேண்டும் என்ற கனவு இருந்த நிலையில் தற்போது சூர்யா தனது சொந்த வாழ்வில் விமானம் வாங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே நயன்தாரா உள்ளிட்ட ஒரு சில திரை உலக பிரபலங்கள் சொந்தமாக விமானம் வைத்திருக்கும் நிலையில் சூர்யாவும் தற்போது சொந்த விமானம் வாங்கி இருப்பதாகவும் இந்த விமானத்தின் மதிப்பு சுமார் ரூ.120 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த விமானத்தில் நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு வசதிகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. சூர்யா தனது குடும்பத்துடன் வெளி மாநிலம் அல்லது வெளிநாடு செல்லும் போது இந்த விமானத்தை பயன்படுத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் இன்னொரு திரைப்படமான ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இதனை அடுத்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘ஜெர்மன்’ என்ற படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அதனை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment