130 ஆண்டுகள் பயணம் பிரமிக்க வைக்கிறது.. சூர்யாவிடம் பாராட்டு பெற்ற பிரபலம் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,February 17 2024]

நீரதிகாரம் என்ற நாவலை எழுதிய நாவலாசிரியர் வெண்ணிலா என்பவருக்கு நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நாவலாசிரியர் வெண்ணிலா எழுதிய நீரதிகாரம் என்ற நாவல் முன்னணி வார இதழ் ஒன்றில் வெளியான நிலையில் அந்த நாவலுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மதுரை அருகே மக்கள் பஞ்சத்தில் மடிந்த நிலையில் அதன் வறட்சிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக பென்னிகுக் என்ற பிரிட்டிஷ் நபர், அணை கட்ட முயற்சி செய்தது, அந்த அணைக்காக அவர் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் அதன் பிறகு செய்த சாதனை ஆகியவற்றை வரலாற்று குறிப்புகளுடன் சுவாரஸ்யமாக சிறிது கற்பனையும் கலந்த நாவலான ‘நீரதிகாரம்’ என்ற நாவலை வெண்ணிலா தொடராக எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இந்த நாவல் தற்போது புத்தகமாக வெளியாகி உள்ள நிலையில் இந்த புத்தகத்தை நடிகர் சூர்யாவிடம் அளித்த வெண்ணிலா, இந்த நாவல் எழுதுவதற்கு தான் பட்ட கஷ்டங்கள், களப்பணிகள் மற்றும் பயணங்கள் ஆகியவற்றை கூறியுள்ளார். வெண்ணிலா கூறியதை கூர்ந்து கவனித்த நடிகர் சூர்யா இந்த நாவலை நான் கண்டிப்பாக படிக்கிறேன் என்றும் தெரிவித்தார். நீரதிகாரம் நாவல் சூர்யா மூலம் பேசப்பட வேண்டும் என்று விரும்பினேன், அது நிகழ்ந்து விட்டது என்றும் அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நீரதிகாரம் நாவல் குறித்து நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: நீரதிகாரம் நாவலுக்காக அ வெண்ணிலா செலுத்தி இருக்கும் உழைப்பு பிரம்மிக்கவைக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெரியாறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து அரபிக் கடலில் சென்று சேரும் இடம் வரை, கம்பம் பள்ளத்தாக்கு செழிப்பிற்கு காரணமாக இருக்கும் முல்லைப் பெரியாறு அணைக்கட்டை தீர்மானித்த பென்னிகுக் அவர்கள் லண்டன் மாநகர் களப்பயணம் செய்து சங்கத் தமிழ் வளர்த்த மதுரை வரலாற்றுடன் இணைத்த முல்லை பெரியாறு அணையின் 130 ஆண்டு பயணத்தை சுவாரசியமாக விவரித்துள்ளார். வாழ்த்துக்கள்’ என்று நடிகர் சூர்யா அதில் தெரிவித்துள்ளார்.

 

More News

செந்தில் பாலாஜியை கைவிட்டதா திமுக: பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பதில்

செந்தில் பாலாஜியை திமுக கைவிட்டதா என கேட்கப்பட்ட கேள்விக்கு "தற்போது வரை இல்லை" என பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.

கவின் நடித்த 'ஸ்டார்' படத்தின் சிங்கிள் பாடல்.. யுவன் குரலில் ஒரு மாயாஜாலம்..!

கவின் நடித்து வரும் 'ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள தமிழ் நடிகர்.. நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் உடன்பாடில்லை என பேட்டி..

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில் விஷால் உள்பட மேலும் சில நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் மன்சூர் அலிகான்

'அமரன்' படத்தின் ஹீரோ கேரக்டர்.. விஜய்க்கு அடுத்து மரியாதை செலுத்தும் சிவகார்த்திகேயன்..!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு 'அமரன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் வீடியோ டீசர் வெளியாகி உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது

யாரும் யோசிக்காத வேற லெவல் டைட்டில்.. சிவகார்த்திகேயன் 21வது படத்தின் சூப்பர் டீசர்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய டீசர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது