வருமான வரி வட்டி வழக்கு: தீர்ப்புக்கு பின் சூர்யா தரப்பு எடுத்த அதிரடி முடிவு!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வருமான வரி வட்டி விலக்கு குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை சற்று முன் பார்த்த நிலையில் நடிகர் சூர்யா தரப்பு இந்த வழக்கை மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யா வீட்டில் கடந்த 2010ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்ததில் இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரியை மதிப்பீடு செய்து வரியைக் கட்ட வேண்டுமென 2011ஆம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்த நிலையில் மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் அந்த தீர்ப்பை உறுதி செய்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு 3 ஆண்டுகள் தாமதமானதற்கு வருமான வரித்துறை காரணம் என்றும், அதனால் தாமத காலமான மூன்று ஆண்டுகளுக்கு ஒரு சதவீதம் வட்டி வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி நடிகர் சூர்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்எம் சுப்ரமணியம் தலைமையில் விசாரணைக்கு வந்தபோது சூர்யா வருமானவரி சோதனை நடத்திய 45 நாட்களுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆனால் சூர்யா தாமதமாகவே தாக்கல் செய்ததால் அவர் வருமான வரி சட்டப்படி வட்டி விலக்கு பெற உரிமை இல்லை என்றும் வருமான வரித்துறை சார்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சூர்யாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவரது தரப்பு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அவரது தரப்பினர் கூறியபோது, ‘வரி மற்றும் வரிக்கான வட்டியையும் முறையாக செலுத்தி முழு ஒத்துழைப்பு கொடுத்து உள்ளோம் என்றும் இந்த வழக்கில் நாங்கள் வெற்றி அடைந்தால் வட்டி பணம் 56 லட்ச ரூபாய் எங்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று சூர்யா தரப்பு விளக்கம் அளித்துள்ளது. மேலும் வருமான வரி மற்றும் வட்டி ஆகியவற்றை முழுமையாக கட்டி உள்ளோம் என்றும் இன்று எங்கள் தரப்பில் இருந்து செலுத்தப்பட வேண்டிய தொகை எதுவும் இல்லை என்றும் வருமான வரித்துறையின் வட்டியை திருப்பித் தருவதில் மட்டுமே சர்ச்சை என்றும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும் சூர்யா தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout