கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆனார் நடிகர் சூர்யா.. சூப்பர் அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Wednesday,December 27 2023]

நடிகர் சூர்யா கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஆனதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் என்ற புதிய வகை 10 ஓவர்கள் கிரிக்கெட் தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ளது. ஐஎஸ்பிஎல் என்று கூறப்படும் இந்த தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே ஹைதராபாத் அணியின் உரிமையாளராக ராம்சரண் தேஜா, மும்பை அணியின் உரிமையாளராக அமிதாப்பச்சன், ஸ்ரீநகர் அணியின் உரிமையாளராக அக்ஷய குமார் மற்றும் பெங்களூர் அணியின் உரிமையாளராக ஹிருத்திக் ரோஷன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் சென்னை அணியின் உரிமையாளராக தன்னை அறிவித்துள்ளார். ஐஎஸ்பிஎல் டி10 தொடரில் எங்கள் சென்னை அணியின் உரிமையை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களும், விளையாட்டுத்துறை மற்றும் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஒரு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சூர்யாவுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா தீக்குளிச்சிருவாங்க போல.. நள்ளிரவில் பேசிய போட்டியாளர்..!

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவர் நானெல்லாம் டைட்டில் வாங்கிட்டா இவனுங்க செட் முன்னாடியே தீக்குளித்து விடுவாங்க போல என்று காமெடியாக பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

அவரை முந்தணும், இவரை முந்தணும் என்ற எண்ணம் இல்லை. 'அயலான்' இசை வெளியிட்டு விழாவில் எஸ்கே...!

சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த நிலையில் மிகவும் குறைவான ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்களுடன் இந்த விழா நடைபெற்றது.

'கோச்சடையான்' வழக்கில் பிடிவாரண்ட்.. நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த்.. ஜாமின் கிடைத்ததா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான 'கோச்சடையான்' திரைப்பட த்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட்

எனக்கு 2வது திருமணம் ஆகிவிட்டது: புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் காஜல்.. உண்மை என்ன?

 பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக கலந்து கொண்ட காஜல் தனக்கு இரண்டாவது திருமணம் ஆகிவிட்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த

'டிக்கெட் டு ஃபினாலே' அடுத்த டாஸ்க்.. எலிமினேட்டர் ஆனவர்கள் யார் யார்?

 பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது டிக்கெட் டு ஃபினாலே' டாஸ்க் நடந்து வரும் நிலையில் அதன் அடுத்த கட்ட டாஸ்க் குறித்த புரமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.