மீண்டும் ஒரே படத்தில் சூர்யா - விக்ரம்.. 3 பாகங்கள்.. ரூ.1000 கோடி பட்ஜெட்?

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

பாலாவின் 'பிதாமகன்' திரைப்படத்தில் ஏற்கனவே சூர்யா மற்றும் விக்ரம் இணைந்து நடித்த நிலையில், தற்போது மீண்டும் இருவரும் ஒரே படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஷங்கர் தற்போது 'கேம் சேஞ்சர்' என்ற படத்தை இயக்கி முடித்த நிலையில், அந்த படத்தின் தொழில்நுட்ப பணிகளில் பிஸியாக உள்ளார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக இருக்கும் திரைப்படம் 'வேள்பாரி' நாவல் அடிப்படையிலான படமாக இருக்கும் என்றும், அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து, ’வேள்பாரி’ படத்தில் யாஷ் உள்பட சில பான் இந்திய நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்பது குறித்து தகவல்கள் வெளிவந்த நிலையில், தற்போது சூர்யா மற்றும் விக்ரம் நடிக்க இருப்பதாகவும், இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வேள்பாரி கேரக்டரில் சூர்யா, பாண்டிய மன்னன் கேரக்டரில் விக்ரம் நடிப்பார்கள் என்றும், 'பொன்னியின் செல்வன்' போலவே இந்த படமும் பிரம்மாண்டமாக உருவாகும் என்றும் கூறப்படுகிறது. மொத்தம் மூன்று பாகங்களாக, ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், வேள்பாரி நாவல் தொடர்பான சில காட்சிகள் வேறு சில படங்களில் வெளியான நிலையில், அந்த காட்சிகளை நீக்க வேண்டும், இல்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.