மீண்டும் 'வாடிவாசல்' ஒத்திகை படப்பிடிப்பில் சூர்யா: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
உண்மையான ஜல்லிக்கட்டு மைதானம் போலவே உருவாக்கப்பட்ட செட்டில், உண்மையான ஜல்லிக்கட்டு வீரர்களுடன் சூர்யா, காளைகளை அடக்கும் ஒத்திகை படப்பிடிப்பு நடத்தப்பட்டது என்பதும், இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது என்பதும் தெரிந்ததே .
இந்தநிலையில் ‘வாடிவாசல்’ படத்தின் அடுத்தகட்ட ஒத்திகை படப்பிடிப்பு தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சூர்யா நேற்று திருவனந்தபுரத்திற்கு சென்றுள்ளார் என்பதும் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவர் நடந்து செல்லும் காட்சியின் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில், ஜல்லிக்கட்டு குறித்து பல்வேறு ஆய்வுகள் உடன் தொடங்கப்பட உள்ள இந்த படம், தமிழ் சினிமாவில் ஒரு முத்திரை பதிக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Our chief @Suriya_offl anna spotted at Trivandrum Airport#EtharkkumThunindhavan #VaadiVaasal pic.twitter.com/5VrKQCF0A7
— ?????? ????????????™??️ (@SFC_Shield_team) April 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com