சூர்யா-வெற்றிமாறனின் 'வாடிவாசல்' படத்தின் வேற லெவல் அப்டேட்!

சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் வேற லெவல் அப்டேட் ஒன்று சற்றுமுன் வெளியாகியுள்ளதை அடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது/ அதேபோல் சூரி நடிக்கும் ’விடுதலை’ என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படமும் நிறைவடையும் தருவாயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதன்படி ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் டைட்டில்உக் நாளை மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சூர்யாவின் ரசிகர்கள் தற்போது உற்சாகமாகியுள்ளனர்.