சூர்யா-சுதாகொங்காரா படத்தின் வித்தியாசமான டைட்டில்!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் 'சூரரை போற்று' என்பதுதான்

வித்தியாசமான டைட்டிலில் உருவாகும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ஜிவி பிரகாஷின் 'சர்வம் தாளமயம்' படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

நிகேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் ஜாக்கியின் கலை இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது

இந்த டைட்டில் அறிவிக்கப்பட்ட ஒருசில நிமிடங்களில் சூர்யாவின் ரசிகர்கள் இந்த டைட்டிலை டுவிட்டர் டிரெண்டுக்கு கொண்டு வந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தையின் உயிரைப் பறித்த பிரியாணி!

5 வயது சிறுமி,  பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இறந்த பாட்டியின் உடலில் ஒளிந்திருந்த அதிசயம், 2 வருடத்திற்கு பின் கண்டுபிடித்து மாணவர்கள்!

அமெரிக்காவைச் சேர்ந்த 99 வயது பாட்டி ரோஸ்மேரி,  கடந்த 2017 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

அண்ணியின் தங்கையை நம்பவைத்து... இளைஞர் அரங்கேற்றிய கொடூர சம்பவம்!

சொந்த சகோதரரின் மனைவியின், தங்கை தன்னுடைய காதலை ஏற்றுக்கொள்ளாததால், அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல காமெடி நடிகர்

நடிகர் விவேக் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்கவிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது

4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மக்களவை தேர்தலுடன் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மீதியுள்ள  அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு