'சூர்யா 43' படத்தின் கதை இதுவா? சுதா கொங்காரா கை வைக்கும் உணர்வு மிக்க விஷயம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் பல ஆண்டுகளாக உணர்வுபூர்வமாக கையாளப்பட்டு வரும் ஒரு விஷயத்தை ’சூர்யா 43’ படத்தின் கதையாக சுதா கொங்கரா எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ என்ற படத்தில் நடிக்க வருகிறார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் கதை ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்த கதை அம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.
கடந்த 1950 முதல் 1965 ஆம் ஆண்டு வரை தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கதை அம்சம் தான் இந்த படத்தின் கதை என்றும் அந்த காலத்தில் இருந்த அண்ணா சாலை செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கல்வியின் அவசியம் குறித்த காட்சிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
சூர்யா, துல்கர் சல்மான், நஸ்ரியா உள்பட பலரது நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத முக்கிய விஷயமான ஹிந்தி திணிப்பை சுதா கொங்காரா எடுத்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout