'சூர்யா 43' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு எங்கே? 'ஜெய்பீம்' உடன் கனெக்ட் ஆகிறதா?

  • IndiaGlitz, [Wednesday,December 20 2023]

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 43’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’சூர்யா 43’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. எந்தவித செட் போடாமல் இயற்கையாக உள்ள பகுதிகளில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிகிறது.

ஏற்கனவே சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படத்தின் படப்பிடிப்பு இதே கல்லூரியில் நடைபெற்ற நிலையில் மீண்டும் இந்த கல்லூரியில் சூர்யா படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுதா கொங்காரா இயக்கத்தில், 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாக இருக்கும் இந்த படம் ஜிவி பிரகாஷின் 100வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், விஜய் வர்மா உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.