close
Choose your channels

சூர்யா-சுதா கொங்கரா படத்தின் நாயகி இவரா? 10 வருடங்களுக்கு பின் மீண்டும் ரீஎண்ட்ரி..!

Thursday, September 14, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா மற்றும் சுதா கொங்கரா மீண்டும் இணையும் திரைப்படத்தின் நாயகியாக பத்து வருடத்திற்கு பின் பிரபல நடிகை ஒருவர் ரீஎண்ட்ரி செய்ய இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு அவர் ’சூரரை போற்று’ இயக்குனர் சுதா கொங்கராவுடன் மீண்டும் இணைய இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக நஸ்ரியா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழில் ’நேரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா, ’ராஜா ராணி’ ’நய்யாண்டி’ ’வாயை மூடி பேசவும்’ போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’திருமணம் என்னும் நிக்கா’ என்ற படத்தில் நடித்த நிலையில் தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி ஆகப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் விஜய் வர்மா என்பவர் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment