2 பாகங்கள், 3 நாடுகள், 10 மொழிகள், 170 நாட்கள்: 'சூர்யா 42' படம் குறித்த ஆச்சரியமான தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது
இந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
‘சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
முதல் பாகத்தின் படப்பிடிப்பு மட்டுமே சுமார் 160 முதல் 180 நாட்கள் வரை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தபின்னரே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி மூன்று வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது
தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 4 கேரக்டர்களில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா, திஷா பதானி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout