2 பாகங்கள், 3 நாடுகள், 10 மொழிகள், 170 நாட்கள்: 'சூர்யா 42' படம் குறித்த ஆச்சரியமான தகவல்!

  • IndiaGlitz, [Thursday,October 20 2022]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 42’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது

இந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்த நிலையில் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

‘சூர்யா 42’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு சென்னை மற்றும் புதுச்சேரியில் உள்ள பகுதிகளில் படமாக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

முதல் பாகத்தின் படப்பிடிப்பு மட்டுமே சுமார் 160 முதல் 180 நாட்கள் வரை படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்தபின்னரே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு உள்நாட்டில் மட்டுமின்றி மூன்று வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படம் ஒரு சரித்திர கதையம்சம் கொண்டது என்றும் இந்த படத்தில் அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் ஆகிய 4 கேரக்டர்களில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா, திஷா பதானி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பதும் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவில் நிஷா யூசுப் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இனி பிரமாண்ட பட இயக்குனர்களுக்கு ஹார்ட் அட்டாக் தான் வரும்: ராம்கோபால் வர்மா

சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படமான 'காந்தாரா' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் வெற்றியால் பிரமாண்ட பட இயக்குனர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என பிரபல

சிம்புவின் 'பத்து தல' படப்பிடிப்பின் முக்கிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்!

சிம்பு அடுத்து வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

'விக்ரம்' ரோலக்ஸ் - 'கைதி' டெல்லி சந்திப்பு நடக்குமா? கார்த்தியின் பதில்!

 'விக்ரம்' படத்தில் உள்ள ரோலஸ் கேரக்டர் மற்றும் 'கைதி' படத்தில் உள்ள டெல்லி கேரக்டர் சந்திப்பு நடக்குமா என்ற கேள்விக்கு நடிகர் கார்த்தி பரபரப்பான பதிலளித்துள்ளார். 

அதே எனர்ஜி, அதே டான்ஸ்: தளபதி விஜய்யை 'வாரிசு' செட்டில் பார்த்த பிரபலத்தின் டுவிட்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் 'வாரிசு' படத்தின் செட்டில் விஜய்யை பார்த்த பிரபலம் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் '

ஐஸ்வர்யா ரஜினியின் அடுத்த படத்தின் பூஜை.. ஹீரோ, தயாரிப்பாளர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பூஜை நவம்பர் முதல் வாரம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.