கிராபிக்ஸ் காட்சிகளின் பிரமாண்டம்.. சூர்யாவின் அசத்தல் கெட்டப்.. 'கங்குவா' டீசர்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பக் காட்சியே அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தொடங்குகிறது என்பதும் ஆயிரக்கணக்கான துணை நடிகர்கள் மற்றும் கழுகு பார்வையில் மலைகளில் வரிசையாக மக்கள் நடந்து செல்லும் காட்சி, மனித பிணக்குவியல்கள் காட்சி ஆகிய காட்சிகளுடன் ஆரம்பிக்கும் போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது

கடலில் பிரம்மாண்டமான படகுகளின் அணிவகுப்பு, போர் முரசு கொட்டும் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான அறிமுகம் ஆகிய காட்சிகள் டீசரில் பார்க்கும்போது மிரள வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மொத்தத்தில் 51 வினாடிகள் மட்டுமே உள்ள இந்த டீசரை பார்க்கும்போது ‘கங்குவா’ திரைப்படம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்று என்பது தெரிய வருகிறது. மொத்தத்தில் சூர்யாவுக்கு ஒரு மறக்க முடியாத படமாக ‘கங்குவா’ இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More News

சௌந்தர்யா ரஜினியின் புதிய வெப் தொடர்.. ஹீரோ, ஹீரோயினை அறிவித்த அமேசான் ப்ரைம்..!

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வெப் தொடர் ஒன்றை விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை சமந்தாவின் அடுத்த புரொஜக்ட்.. அட்டகாசமான டைட்டில் போஸ்டர்..!

நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையுலகில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு

விஜய்யின் கடைசி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்திற்கு அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தகவலை கேட்டு இந்திய திரை உலகினர்

'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகிக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி..!

'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகி விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனையை செய்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.. இதுதான் உண்மையான வெற்றி..!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பதை பார்த்து மலையாள திரை உலக மட்டும் மட்டுமின்றி ஒட்டுமொத்த