'நலமா....? சூர்யாவின் ஆக்ரோஷமான வசனத்தில் 'கங்குவா' கிளிம்ப்ஸ் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி வரும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தை கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகி உள்ள இந்த வீடியோவில் காடு மலை தாண்டி வீரர்கள் இறந்து கிடக்கும் காட்சிகள் மிரள வைக்கிறது. இந்த நிலையில் தூரத்திலிருந்து அம்பு விட்டு ஒருவரை சூர்யா கொல்லும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
சிறுத்தை சிவாவுக்கே உரித்தான நான்ஸ்டாப் டயலாக் பின்னணியில் சூர்யாவின் கெட்டப் தெறிக்க வைக்கிறது. ஆழிக்குள் கொடிநட்ட மாறாக்கன் வழி வந்து… வேழத்தை விழ வச்ச கொச்சாமி வழிவந்து..” என்ற வசனத்துடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இரண்டு நிமிடங்களுக்கும் மேல் உள்ளது.
கிளிம்ஸ் வீடியோவின் கடைசியில் ’நலமா....? என்று ஆவேசமாக சூர்யா கேட்கும் தொனியுடன் வீடியோ முடிவுக்கு வருகிறது. தேவிஸ்ரீ பிரசாத்தின் ‘கங்குவா’ என்ற பின்னணி இசையில் உருவாகியுள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த படம் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்பதும் வீடியோவின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த படம் 2024ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com