அடடே என்ன ஒரு கூட்டணி? சூர்யா - ஆர்ஜே பாலாஜி படத்தின் இசையமைப்பாளர் இவரா?

  • IndiaGlitz, [Tuesday,September 24 2024]

சூர்யாவின் 45 வது திரைப்படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், இந்த படத்தின் இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த தகவல் வெளியாகி, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா, தற்போது 'கங்குவா’ என்ற படத்தில் நடித்து முடித்துவிட்டு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், சூர்யாவின் 45வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக செய்தி வெளியான நிலையில், தற்போது இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா நடித்த ’24’ திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த நிலையில், தற்போது அவருடைய 45 வது படத்திற்கும் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சூர்யா, ஆர். ஜே. பாலாஜி, ஏ. ஆர். ரகுமான், மற்றும் ட்ரீம் வாரியார் நிறுவனம் எனும் கூட்டணி சூப்பராக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More News

தனுஷின் 'இட்லி கடை': நித்யா மேனன், அசோக் செல்வன், அருண் விஜய் கேரக்டர்கள் என்ன?

தனுஷ் நடித்தும் இயக்கியும் வரும் 'இட்லி கடை' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நித்யா மேனன், அருண் விஜய், மற்றும் அசோக் செல்வன்

மது அருந்த கூடாது உள்பட சில நிபந்தனைகள்.. தவெக தொண்டர்களுக்கு புஸ்ஸி ஆனந்த்..!

தளபதி விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி என்ற பகுதியில் நடைபெற இருக்கும் நிலையில்

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை!

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில்

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துல நாம தான் முட்டாள்: கேபிஒய் சரத்

மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,