'சூர்யா 45' ஒரு சாமி படமா? கதையை மாற்றிய ஆர்.ஜே. பாலாஜி?

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

சூர்யா நடிக்க இருக்கும் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த படம் ஒரு சாமி படம் என்று செய்தி வெளியாகியுள்ளது, பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக ஆர்.ஜே. பாலாஜி ’மூக்குத்தி அம்மன்’ படத்தை இயக்கிய நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் ’மூக்குத்தி அம்மன் 2’ படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது என்பதும், இதனால் ஆர்.ஜே. பாலாஜி, த்ரிஷாவை வைத்து ’மாசாணி அம்மன்’ என்ற படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அந்த நிலையில், திடீரென சூர்யாவின் 45வது திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே விஜய்க்கு சொன்ன கதையை தான் அவர் சூர்யாவுக்கு சொல்லி, அவரின் சம்மதம் பெற்றதாக கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின் படி, ’மாசாணி அம்மன்’ திரைபடத்தின் திரைக்கதையை தான் சூர்யாவுக்காக மாற்றி உள்ளதாகவும், அம்மன் கேரக்டரை சூர்யாவுக்காக ஆண் தெய்வம் கேரக்டராக மாற்றி ’சூர்யா 45’ படத்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதைக் போக போக தான் தெரியும்.

More News

'சம்பவம் வெயிட்டிங்'.. வீர தீர சூரன்' பட அப்டேட்டை தெரிவித்த பிரபலம்..!

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் "விரைவில் சம்பவம் வெயிட்டிங்"

ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி: நியமன அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை கர்ப்பம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

'கபாலி' என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே, கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?  ரிஷிகேஷில் திருமண ஏற்பாடு..!

நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இவர்களின் திருமணம் ரிஷிகேஷில், கங்கை நதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'பாக்கியலட்சுமி' ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறதா? விரைவில் திருமண அறிவிப்பு?

விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர் என்ற நிலையில் தற்போது 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் ரீல் ஜோடியும் விரைவில் ரியல் ஜோடி ஆக இருப்பதாக