விரைவில் சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள்: இசையமைப்பாளர் தகவல்!

  • IndiaGlitz, [Thursday,April 29 2021]

சூர்யாவின் அடுத்த படத்தின் பாடல்கள் தயாராகி வருவதாகவும் விரைவில் பாடல்கள் வெளியாகும் என்றும் இசையமைப்பாளர் தனது டுவிட்டரில் தகவல் தெரிவித்ததை அடுத்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கி வரும் ’சூர்யா 40’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் பிக்பாஸ் புகழ் ரம்யா பாண்டியன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா பாண்டியன் தவிர இந்த படத்தில் வாணிபோஜன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்து வருகிறார். அவர் இந்த படத்திற்கான பாடல்கள் குறித்து தனது டுவிட்டரில் கூறியபோது ’பாடல்களின் பைனல் மிக்சிங் மற்றும் மாஸ்டரிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும். மேலும் பின்னணி இசை பணியும் தொடங்கி விட்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்

ரம்யா பாண்டியன், வாணிபோஜன் உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படத்தை அரசில் மூர்த்தி என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.