குளு குளு இடத்தில் 'எதற்கும் துணிந்தவன்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு! ஃபர்ஸ்ட்சிங்கிள் எப்போது?

  • IndiaGlitz, [Tuesday,September 14 2021]

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் சென்னையில் நடைபெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குளு குளு குற்றாலத்தில் தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் குற்றாலத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படப்பிடிப்பில் சூர்யா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடல் வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல் இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் அனேகமாக கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், தேவதர்ஷினி உள்பட பலர் நடித்த இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

More News

இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்: கமல்ஹாசன்

நீட் தேர்வுக்கு முன்னர் தனுஷ் என்ற மாணவரும், நீட் தேர்வுக்கு பின்னர் கனிமொழி என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டது குறித்து கருத்து கூறிய கமல்ஹாசன் அவர்கள் 'இது ஒரு நாடு

எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்: 'அண்ணாத்த' படக்குழு செய்யும் மரியாதை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமான நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளில் 'அண்ணாத்த'

யார் யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்கும்?

தமிழகச் சட்டப்பேரவையில் நேற்று பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவு சங்கங்களில் பெற்றுள்ள 5 பவுன் வரையிலான நகைக் கடன்கள் தள்ளுபடி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்ஸில் மிரட்டிய வீரர்… அசுரத்தனமான ஆட்டத்தால் வெற்றி!

அமெரிக்க ஓபன் ஒற்றையர் ஆடவர் பிரிவில் விளையாடிய ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ்

6 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளிகள் திறப்பா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் நேற்று சுமார் 1500 பேர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பதும் தெரிந்ததே.