'சூர்யா 44' படத்தின் நாயகி இவர் தான். அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சூர்யா 44’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் அந்தமானில் நடைபெற உள்ளது. ஏற்கனவே சூர்யா உட்பட படக்குழுவினர்களில் முக்கியமானவர்கள் அந்தமான் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் நடிகர் ஜெயராம் அந்தமான் சென்றுள்ளதால் அவரும் இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் சிவன் என்றும் இதனை அடுத்து ஐந்து தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவர்களது பெயர்கள் பின்வருமாறு:
1. கலை இயக்குனராக ஜாக்சன்: இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ’விடுதலை’ ’அசுரன்’ போன்ற படங்களில் ஏற்கனவே பணிபுரிந்தவர்.
2. காஸ்டியூம் டிசைனர் பிரவீன் ராஜா: இவர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’லியோ படத்தில்’ பணிபுரிந்தவர். அதேபோல் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தில் பணிபுரிய உள்ளார்.
3. ஸ்டண்ட் இயக்குனர் ஜெயிக்கா: இவர் விஜய் நடித்த ’துப்பாக்கி’, எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ’பாகுபலி 2’ மற்றும் ஷாருக்கானின் ’ஜவான்’ போன்ற படங்களில் ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிந்தவர்.
4. படத்தொகுப்பாளர் சபிக் முகமது அலி: இவர் ’ஜேடிஎஸ்’ என்ற படத்தில் பணிபுரிந்தவர்.
5. ஒளிப்பதிவாளர் ஸ்ரேயா கிருஷ்ணா: இவர் தனுஷ் நடித்த ’கேப்டன் மில்லர்’ மற்றும் மணிகண்டன் நடித்த ’லவ்வர்’ உட்பட சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாயகி ஆக நடிக்கும் நடிகை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில் அது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பூஜா ஹெக்டே இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
பூஜா ஹெக்டே ஏற்கனவே விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் பிரபல நடிகர் சூர்யாவுடன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
A killer on screen! Delighted to have the dazzling diva @hegdepooja with us for #Suriya44 🔥
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) June 1, 2024
Welcome onboard #PoojaHegde 💃🏻#LoveLaughterWar ❤️🔥 #AKarthikSubbarajPadam📽️@Suriya_Offl @karthiksubbaraj @Music_Santhosh @rajsekarpandian @kaarthekeyens @kshreyaas @cheps911… pic.twitter.com/T7hJMFeTQF
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com